அரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த கட்சி ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி ஆட்சி அமைத்தது.
பா.ஜனதாவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும், ஜனநாயக ஜனதா கட்சியை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தனர்.மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜக ஜனநாயக ஜனதா் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
இதனிடையே சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அரியானா மாநில பாஜக தலைவர் நயாப் சிங் சைனி முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் அரியானா சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சட்டசைப கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொறடா வின் உத்தரவை மீறி 5 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே நேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மனோகர்லால் கட்டார் தனது எம்எல்ஏ பதவியையும் இன்று ராஜினாமா செய்தார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.