2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணி வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்ரி புரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஹார்ரி புரூக் விலகியுள்ளது டெல்லி அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.