ஐபிஎல் பயிற்சியின் போது சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் வீசிய பந்தை அடிக்க முடியாமல் தவித்த இஷான் கிஷன். வைரலாகும் வீடியோ.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
அதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷனுக்கு பந்து வீசினார். அவர் வீசிய யார்க்கர் பந்தை அடிக்க முடியாமல் இஷான் திணறினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Just Arjun doing 𝘈𝘳𝘫𝘶𝘯 things 🏹😉#OneFamily #MumbaiIndians pic.twitter.com/Sv7eObeFSO
— Mumbai Indians (@mipaltan) March 12, 2024