டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ராவை பின்னுக்கு தள்ளிய மற்றொரு இந்திய வீரர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ராவை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்துள்ளார் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் 9 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 870 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.
பும்ரா 847 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதே பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 788 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
For the sixth time in his career, Ravichandran Ashwin is the No.1 bowler in the ICC Men’s Test Player Rankings 👏
➡️ https://t.co/hLGP7qOqE3 pic.twitter.com/oYLyWzC4ut
— ICC (@ICC) March 13, 2024
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை பட்டியல் :
1. அஸ்வின் – 870 ரேட்டிங் புள்ளிகள்
2. ஜோஷ் ஹேசல்வுட் – 847
2. ஜஸ்பிரிட் பும்ரா – 847
4. ககிசோ ரபாடா – 834 புள்ளிகள்
5. பாட் கம்மின்ஸ் – 820 புள்ளிகள்
6. நாதன் லியோன் – 801 புள்ளிகள்
7. ரவீந்திர ஜடேஜா 878 புள்ளிகள்
8. பிரபாத் ஜெயசூர்யா – 783 புள்ளிகள்
9. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 739 புள்ளிகள்
10. ஷஹீன் அப்ரிடி – 733 புள்ளிகள்
அதேபோல் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 751 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 740 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.