நடிகர் அஜித் நடிப்பில் உருதுவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகர் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசன்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டார்.அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.
இந்நிலையில் நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகியது. மேலும் ‘விடாமுயற்சி’ படம் தொடர்பான ‘அப்டேட்’ எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாளை (14-ந் தேதி) ஆச்சர்யப்படதக்க வகையில் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’, ‘துணிவு’ உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்பட்டதால், தற்போது ‘விடாமுயற்சி’ படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.