பிரதமர் மோடிக்கு ஆதரவாகத் திருநங்கைகள் பலர் ஆர்வமுடன் பா.ஜ.க-வில் இணைந்தனர்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதப் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என திருநங்கைகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ஏராளமான திருநங்கைகள் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில், பாஜகவில் ஆர்வமுடன் இணைந்தனர்.
மேலும், புதிதாக பா.ஜ.க-வில் இணைந்த திருநங்கைகள் அனைவரும் புதுக்கோட்டையில் தெருமுனை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சித்ரா பெளர்ணமி அன்று கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில், மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க மீதும், பிரதமர் மோடி மீதும் திருநங்கைகள் கொண்ட தூய்மையான அன்புக்கு, டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.