நமது மக்கள் தொகை 140 கோடி என்றும், இதுவரை 1000 பேர் மட்டுமே போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற விக்சித் பாரத் நிகழ்ச்சியில் சிஏஏ குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசினார்.
அப்போது கூட்டத்தில் பேசியவர்,
“நமது அண்டை நாடுகளில் சில சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள். பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பலர்.1947-ல் பாகிஸ்தானில் இந்துக்களின் மக்கள் தொகை 24% ஆக இருந்தது. இன்று 1% ஆக உள்ளது.
முந்தைய கிழக்கு பாகிஸ்தானில் குறிப்பிட்ட இந்து மக்கள் தொகை தற்போது 7% மட்டுமே உள்ளது. இவர்களில் சிலருக்கு 2014 க்கு முன் இந்தியா வந்தவர்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. இங்கு சிலருக்கு திடீரென கவலை, புலம்பெயர்ந்தோர் அனைத்து வேலைகளையும் வளங்களையும் பறிப்பார்கள் என்று. நமது மக்கள் தொகை 140 கோடி என்றும், இதுவரை 1000 பேர் மட்டுமே போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என்பதை அறிய வேண்டும்.
1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் வெறும் 4000 தான். இது மதத்தைப் பற்றியது அல்ல. இது இலங்கைத் தமிழர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை உள்ளடக்காது. சிஏஏ பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்பி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் பற்றிய நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் இவை. இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரு மனிதாபிமான நாடு. நாங்கள் சில கொள்கைகளை பின்பற்றியுள்ளோம்” மக்களை எல்லையில் திருப்பி அனுப்புவதில்லை” எனத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் கிராம மக்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர், அப்பகுதி பெண்களின் குரல் நாடு முழுவதும் ஒலித்ததாகக் கூறினார்.
முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் ஷேக்கின் விசாரணையை மேற்கு வங்க சிஐடியில் இருந்து மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றுவதில் TMC அரசு ஆர்வம் காட்டவில்லை என்று அவர் சாடினார்.
சந்தேஷ்காலி பெண்கள் தங்கள் மீதான அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று கூறினார்.