தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேஷன் கடைகளில், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2021 -ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய நலத்திட்ட உதவிகள் அளிக்க வசதியாக, புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு தகுதி உடைய 45,409 குடும்ப அட்டைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
புதிய குடும்ப அட்டை இல்லாததால் பொருட்கள் நிறுத்தப்படமாட்டாது. எனவே, புதிய குடும்ப அட்டைக்கான குறுஞ்செய்தியை நியாயவிலைக் கடைகளில் காண்பித்துப் பொருட்களைப் பெறலாம்.
இந்த தகவலை உணவுப் பொருட்கள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஹா் சகாய் மீனா தெரிவித்துள்ளார்.