சட்ட விரோத பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக, சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை முதலே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், கொளத்தூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக உள்ளார்.
இதேபோல், பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை முறைகேடு புகார்கள் தொடர்பாக, நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துணை இராணுவ படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.