பாட்டியாலா காங்கிரஸ் எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சரும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் இன்று பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாட்டியாலா எம்.பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பிரனீத் கவுர்,
“பிரதமர் மோடியின் தலைமையில் எனது தொகுதி, எனது மாநிலம் மற்றும் நாட்டிற்காக நான் பாடுபடுவேன். பாஜகவில் சிறந்த பணி செய்வேன் எனத் தெரிவித்தார்.