பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் பிரதமர், பின்னர் கார் மூலம், அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை யொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் சூரிய உதயத்திற்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல, பிரதமர் மோடி வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.