2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் முதல் ஐந்து இளம் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது 2024 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் வீரர்கள் குறித்து பார்ப்போம்.
1. இந்த பட்டியலில் முதலிடத்தில் பிடித்திருப்பவர் ரச்சின் ரவீந்திரா. இவர் ஏற்கனவே ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தவுள்ளார்.
உலக கோப்பையில் பத்து போட்டிகளின் விளையாடி 578 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா, மூன்று சதம், இரண்டு அரை சதம் அடித்திருந்தார்.
மேலும் இவர் சுழற்பந்து வீசக்கூடிய வீரர் என்பதால் சிஎஸ்கே அணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கொடுத்து இவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது.
மேலும் இந்த முறை இவர் தொடக்க வீரர்க்க களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் தொடக்க வீரரான கான்வே காயம் காரணமாக விலகிருப்பதால் இவர் அந்த இடத்தை நிருபுவர் நேற்று நம்பப்படுகிறது.
2. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணி வாங்கியிருக்கும் சமீர் ரிஸ்வி. இவரை இவரை வலது கை சுரேஷ் ரெய்னா என்று தான் ரசிகர்கள் அழைப்பார்கள்.
சையது முஸ்தாக் அலி கோப்பையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமீர் ரிஸ்வி 46 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். மேலும் சிகே நாயுடு கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தினார்.
இதனால் சமீர் ரிஸ்வி, இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு மிகப்பெரிய ஸ்டார் ஆக வருவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
3. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை அணி வாங்கியிருக்கும் ஜெரால்ட் கோயிட்சே. இவர் எஸ்ஏ டி20 தொடரில் ஜே எஸ் கே அணிக்காக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.
தற்போது முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அவர் களமிறங்கப்போகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை வீழ்த்திய கோயிட்சே மும்பை அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மும்பை அணி தற்போது வாங்கியிருக்கும் நுவன் துஷாரா. குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் மலிங்கா போலவே அபாரமாக யார்க்கர்களை வீசக்கூடியவர். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியும் சாதனை படைத்தார்.
5. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்திருப்பவர் குஜராத் அணி வாங்கிய அஸ்மதுல்லா உமர்சாய். ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டர் உமர்சாய் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இவருடைய பந்துவீச்சும் பேட்டிங்கும் பலரால் பாராட்டப்பட்டு இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் 149 ரன்கள் விளாசி இருந்தார்.