மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயத்துடன் ரத்தம் கொட்டிய நிலையில், நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது காளிகாட் இல்லத்தில் இருந்த போது மம்தா பானர்ஜி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் இரவு முழுவதும் நன்றாக தூங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மம்தா பானர்ஜி பூரண குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எக்ஸ் தள பக்கத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.