அசாமின் துப்ரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண்-17 (புதிய)/தேசிய நெடுஞ்சாலை எண் -31 (பழையது) வழியாக நான்கு வழி கௌரிபூர் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடிக்கு நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அசாமில், துமர்தோஹா பிடி-2 முதல் துப்ரி மாவட்டத்தில் உள்ள பலத்மாரா சாலை வரை தேசிய நெடுஞ்சாலை எண் -17 (புதிய) / தேசிய நெடுஞ்சாலை எண்-31-ல் (பழையது) நான்கு வழி கௌரிபூர் புறவழிச்சாலை அமைக்க ரூ.421.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
📢 Assam 🛣
➡ In Assam, an allocation of ₹421.15 Crores has been approved for the construction of a 4-lane Gauripur Bypass along NH-17 (New)/NH-31(Old), spanning from Dumardoha Pt-II to the Baladmara road in Dhubri district.
➡ Covering a total length of 9.61 kilometers, the…
— Nitin Gadkari (मोदी का परिवार) (@nitin_gadkari) March 14, 2024
மொத்தம் 9.61 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் கௌரிபூர் நகரில் நெரிசலைக் குறைப்பதையும், தற்போதைய நெடுஞ்சாலையில் குறுகலான வளைவுகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கட்கரி கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய இந்த புறவழிச்சாலையை செயல்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் விபத்துக்களைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.