2023-24 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 88.07 கோடி டன்னை எட்டியுள்ளது.
2023 ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் இந்தியா 88.07 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.
இதுகுறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 88.07 கோடி டன்னை எட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை அடைய இன்னும் 11.93 கோடி டன் உற்பத்தி மட்டுமே தேவைப்படுகிறது.
முன்னதாக 2022-23 ஆம் நிதியாண்டில் முழுகுவதும் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 89.3 கோடி டன்னாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
அப்போது உற்பத்தி 78.54 கோடி டன்னாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 79.44 கோடி டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11 சதவீதம் அதிகரித்து 88.24 கோடி டன்னாக உள்ளது.
முன்னதாக கடந்த நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது உற்பத்தி 78.54 கோடி டன்னாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 79.44 கோடி டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11 சதவீதம் அதிகரித்து 88.24 கோடி டன்னாக உள்ளது. பிப்ரவரி: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 9.66 கோடி டன்னாக உள்ளது.
2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 8.64 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா லிமிடெட்டின் உற்பத்தி 8 சதவீதம் உயா்ந்து 7.48 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023 பிப்ரவரியில் இது 6.88 டன்னாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.