பிரபல நகைச்சுவை நடிகர் சேசுவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் சேசுவுக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை ஆலம்புன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் சேசு.
இவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சந்தானம், யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் சேசு, கொரோனா காலத்தில் முகநூல் நண்பர்களின் பங்களிப்போடு, பொது மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.