குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று சந்தித்தார்.
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது, பதவியேற்ற பிறகு தமது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கு திரௌதி முர்மு பாராட்டுத் தெரிவித்தார்.
இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவைக் கொண்டிருப்பதாக முர்மு கூறினார்.
புத்த மதத்தின் பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியம் இரு நாடுகளையும் இணைக்கிறது என்று அவர் கூறினார். எரிசக்தி ஒத்துழைப்பு, வளர்ச்சி கூட்டாண்மை, மக்களுக்கு இடையிலான உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற துறைகளில் பரவியுள்ள பூடானுடனான பன்முகக் கூட்டாண்மையை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்று அவர் விளக்கினார்.
இந்தியாவை நம்பகமான நட்பு நாடாகவும், கூட்டாண்மை நாடாகவும் பூடான் நம்பலாம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பூட்டான் மக்களின் சமூக – பொருளாதார நல்வாழ்வு மற்றும் செழிப்பை மேம்படுத்தும் வகையில், வளர்ச்சி ஒத்துழைப்புத் துறையில் பூடானுடன் இணைந்து இருப்பது இந்தியாவுக்கு பெருமை அளிப்பதாக முர்மு கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கான கூட்டாண்மை, பூட்டானின் முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களால், குறிப்பாக இளைஞர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.