பல நாடுகளில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து, Al சாட்போட் ஆன ஜெமினிக்கு கூகுள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க கூகுள் நிறுவனம் அதன் ஏ.ஐ சாட்போட் ஜெமினிக்கு முக்கிய கட்டுப்பாட்டைகளை விதித்துள்ளது.
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகளாவிய தேர்தல்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து ஏ.ஐ சாட்போட் ஜெமினியை கூகிள் கட்டுப்படுத்துகிறது என்று ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனம்கூறியுள்ளது.
ஏனெனில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சாத்தியமான தவறுகளைத் தவிர்க்கிறது. இமேஜ் மற்றும் வீடியோ உருவாக்கம் உட்பட, உருவாக்கப்படும் ஏ.ஐ-ன் முன்னேற்றங்கள், பொது மக்களிடையே தவறான தகவல் மற்றும் போலி செய்திகள் பற்றிய கவலைகளை தூண்டி, தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த அரசாங்கங்களைத் தூண்டும் நேரத்தில் இந்த புதுப்பிப்பு வருகிறது.
ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி போட்டி போன்ற தேர்தல்களைப் பற்றி கேட்கப்பட்டபோது, ஜெமினி, “இந்த கேள்விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில், கூகுள் சர்ச்-ஐ முயற்சிக்கவும் என்று பதிலளிக்கிறது.
ஆகையால் தேர்தல் குறித்த எந்த கேள்விகளை கேட்பினும் ஜெமினி அதற்கு இவ்வாறே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.