குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பாஜக அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார்.ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்த குடியுரிமை சட்டம் உள்ளது. அதில் என்ன தவறு உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குரூப்-1 விடைத்தாள் மதிப்பிடும் விவகாரத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆந்திரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணைய(ஏபிபிஎஸ்சி) முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நாயுடு வலியுறுத்தினார்.