2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தற்போது சென்னை வந்தடைந்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தற்போது சென்னை வந்தடைந்துள்ளார். அவர் சென்னை வந்துள்ள தகவலை சி.எஸ்.கே நிர்வாகம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த ஜடேஜா அந்த தொடர் நிறைவடைந்த பின்னர் தற்போது ஐ.பி.எல் தொடரில் கலந்து கொள்ள உள்ளார். இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.