மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்மை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி :
யாஸ்திகா, மத்தியூஸ், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஹர்மன் ப்ரீத், பூஜா, அமெலியா, அமன்ஜோத், சஜீவன் சஜனா, ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி :
ஸ்ம்ரிதி மந்தனா, சோஃபி மோலினக்ஸ், எலிஸ் பெர்ரி, சோஃபி டெவின், ரிச்சா கோஷ், ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசட், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ஷ்ரத்தா போகர்கர், ரேணுகா தாக்கூர் சிங்.