தமிழகத்தில் பாஜக மீது மக்களிடையே பெருகி வரும் ஆதரவு, முதல்வர் ஸ்டாலினின் நாடகங்களால் தடுக்க முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 18 ம் தேதி பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறையின் வாதத்தை ஏற்காத நிலையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
பிரதமர் மோடியின் சாலை பேரணிக்கு அனுமதி மறுத்த திமுக அரசின் நடவடிக்கையை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திட்டமிட்டப்படி வருகின்ற 18 ஆம் தேதி பிரதமர் மோடியின் சாலை பேரணி நடைபெறும்.
We thank the Honourable Madras High Court for hearing our plea challenging the DMK Govt’s move to deny permission for the Road Show of our Hon PM Thiru @narendramodi avl in Coimbatore on the 18th March 2024.
The verdict of the Honourable Madras High Court today is a tight slap…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 15, 2024
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, எதேச்சாதிகார திமுக அரசுக்கு அடியாக அமைந்தது என்பதை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழகத்தில் பாஜக மீது மக்களிடையே பெருகி வரும் ஆதரவு, அவரது நாடகங்களால் தடுக்க முடியாது! எனத் தெரிவித்துள்ளார்.