மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், தபால் வாக்குச் சீட்டுகள் தயார் செய்யும் பணியைக் கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.
குறிப்பாக, தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்குத் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும் என்றும், தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.