ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை – மத்திய அரசு அதிரடி!
Mar 15, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்திற்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த, பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தை, மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்து, மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும், தீவிரவாத  அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக தடை செய்து வருகிறது.

குறிப்பாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு தீவிரவாத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் குழுக்களை மத்திய அரசு  கண்டறிந்து, அக்குழுவை சேர்ந்தவர்களை கைது செய்தும், தடை விதித்தும் வருகிறது.

அந்த வகையில், கடந்த வாரம் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக, தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பை 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில், பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தை, மேலும், 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, “ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு சட்டவிரோத சங்கமாக அறிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படுவோர், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பதிவிட்டுள்ளார்.

https://x.com/AmitShah/status/1768863040282231148?s=20

Tags: home minister amit shahYasin MalikJKLFJammu and Kashmir Liberation Front
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

Next Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies