நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.
மக்களவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தெரிவித்தார்.
முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் : விவரம்!
வேட்பு மனு தாக்கல் – மார்ச் 20
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 27
வேட்பு மனு பரிசீலனை – மார்ச் 28
வேட்பு மனு திரும்ப பெறுதல் – மார்ச் 30
வாக்குப்பதிவு – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.