பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்: ஒரு மாதத்தில் 1 கோடி குடும்பங்கள் பதிவு!
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் ஆரம்பித்து ஒரு மாதக் காலத்தில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில், “இது ஒரு சிறப்பான செய்தி, தொடங்கப்பட்ட சுமார் ஒரு மாதத்தில், 1 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துள்ளன.
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தலா 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதுவரை பதிவு செய்யாதவர்களும் விரைவில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த முயற்சி எரிசக்தி உற்பத்தியை உறுதி செய்வதுடன், வீடுகளுக்கான மின்சார செலவு கணிசமாகக் குறைவதை உறுதிசெய்கிறது. இது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (லைஃப்) ஒரு பெரிய அளவில் ஊக்குவிக்க தயாராக உள்ளது. இது புவியின் நன்மைக்கும் பங்களிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.