ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை நடிகர் அமிதாப் பச்சன் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் அடுத்த கட்டமாக ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’ நடைபெற்றது. ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் போட்டியாக இருந்தது.
இந்த தொடரில் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் 6 அணிகளுக்கு இடையேயான 19 போட்டிகளாக நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டிய நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் விளையாடின.
மும்பை அணியின் உரிமையாளரான அமிதாப் பச்சனும், நேரடியாக வந்து தனது அணிக்கு ஆதரவு அளித்தார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் ஆதிர்ச்ச அடைந்தனர்.
முன்னதாக அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் காலில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அங்கு அவரை கண்ட ரசிகர் ஒருவர் அவரிடம் எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் நலமா? என்று கேட்கிறார். அதற்கு அமிதாப் பச்சன் ஆம் நலம், அது வதந்தி, என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. இதன் மூலம் ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை பற்றி பரவிய செய்தி வதந்தி என்பது உறுதியாகி உள்ளது.