டேஸ்ட் அட்லஸின் உலகின் ’10 சிறந்த இனிப்புகள்’ பட்டியலில் இந்தியாவின் ரசமலாய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவரிசையை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் உலகின் சிறந்த 10 பால்வகை இனிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ரசமலாய் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ரசமலாய் இந்தியாவில் மேற்குவங்கத்தில் பிரபலமான ஒரு பால்வகை இனிப்பு உணவாகும். டேஸ்ட் அட்லஸ் தரவரிசையில் இந்தியாவின் ரசமலாய்கு 5 -க்கு 4.4 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் முதல் இடத்தில் போலந்து நாட்டின் கேக் வகையை சார்ந்த செர்னிக் என்ற இனிப்பு உள்ளது. இதில் மூன்று மற்றும் 8 ஆகிய இடங்களில் கிரேக்கத்தின் ஸ்ஃபாக்கியனோபிதா மற்றும் மெலோபிடா உள்ளது.
உலகின் ’10 சிறந்த பால்வகை இனிப்புகள்’
செர்னிக், போலந்து
ரசமலாய், இந்தியா
ஸ்ஃபாக்கியனோபிதா, கிரேக்கம்
நியூயார்க் பாணி சீஸ்கேக், அமெரிக்கா
ஜப்பானிய சீஸ்கேக், ஜப்பான்
பாஸ்க் சீஸ்கேக், ஸ்பெயின்
ரகோசி டூரோஸ், ஹங்கேரி
மெலோபிடா, கிரேக்கம்
Kasekuchen, ஜெர்மனி
மிசா ரெஸி, செக் குடியரசு