நாடு முழுவதும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழகத்திற்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஏப்ரல் 19- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 -ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் 45 நாட்கள் உள்ளது.
இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி, அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
முன்னதாக, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.