அடுத்த 2 நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கரூரில் சமீபத்தில் இரண்டு முக்கிய கட்சிகள் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். அது பத்திரிக்கைளிலும் செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நாங்கள் நடவடிக்கை எடுப்பதைவிட, பொது மக்களே நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என நம்புகிறேன். ஒரு தனிப்பட்ட விசயத்தில் நான் எதிர்த்து குரல் கொடுக்கப்போகிறேன் என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
மக்களின் பங்களிப்பாக அரசியல் கட்சி இருக்கு. பாஜகவைப் பொறுத்தவரை இந்த தேர்தலை மிகவும் உன்னிப்பாகவே கவனித்து வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் நீங்கள் இதை பார்ப்பீர்கள். நமது தேர்தல் கூட்டணியை அடுத்த 2 நாளில் அறிவிப்போம். அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளோம். அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.