ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக ஆதார் அட்டையில் புகைப்படம், கருவிழி, பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும்.
ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதியுடன் கால அவசாகம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் https://uidai.gov.in/ இந்த தளத்தின் மூலமாக ஆதார் அட்டையை திருத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக ஆதார் கார்ட்டை அப்பேட் செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.