விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ரௌபதி அம்மன் கோவில்.
இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிழா நடந்தது. அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அக்கோவிலில் திருவிழா நடத்த அதிகாரிகள் தடைவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக திருவிழா நடத்த அனுமதி கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, பொது மக்கள் அனைவரும் ஒன்று கூடி, தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளனர். இதனால், சமாதானம் செய்ய அதிகாரிகள் குழு அந்த கிராமத்தை நோக்கி சென்றுள்ளது.