எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்தவர் பெஸ்ட் ராமசாமி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அண்ணன் பெஸ்ட் ராமசாமி இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்துள்ள அண்ணன் பெஸ்ட் ராமசாமி, இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாவார்.
இன்றைய தினம், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு. பெஸ்ட் ராமசாமி அவர்கள் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்துள்ள அண்ணன் திரு. பெஸ்ட் ராமசாமி அவர்கள், இளைஞர்களுக்கு… pic.twitter.com/qgdJd0ytos
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 17, 2024
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததோடு, அவர் தமது மக்கள் பணிகளும் சமூகப் பணிகளும் நீண்ட காலம் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.