இந்தியாவில் பணக்கார கடவுளாக போற்றப்படுவர் திருப்பதி வெங்கடாஜலபதி. எனவே, திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
இதனால், திருப்பதிக்கு தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பால் மார்ச் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால், திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதில் மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி விஐபி தரிசனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, விஐபி பரிந்துரை கடிதங்கள் என்பது ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் வழங்கப்படும்.
குறிப்பாக, மக்களவைத் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களின் பேரில் ஒதுக்கீடு செய்ய இயலாது.
அதற்கு பதிலாக, நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.