இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27 ம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் மக்களவை தேர்தல், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ மொபைல் ஆப்ஸ் வழியே விண்ணப்பிக்கலாம்.
இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதற்கு பிறகும் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தேர்தலுக்கு பின் பரிசீலிக்கப்படும் என அவர் கூறினார்.