ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபாலே அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில பாரதிய பிரதிநிதி சபா சர்கார்யாவா பதவிக்கு தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் ‘சர்கார்யவா’ (பொதுச் செயலாளர்) ஆக மீண்டும் தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்கார்யாவாவின் பொறுப்பை ஆற்றி வரும் ஹோசபாலே, 2024 முதல் 2027 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு, அகில பாரதிய பிரதிநிதி சபாவால் மீண்டும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து தத்தாத்ரேயா ஹோசபாலே கூறுகையில்,
“ஆர்எஸ்எஸ் சங்கம் மக்களின் இதயங்களில் இடம்பிடித்து வருகிறது. சங்கத்தின் தாக்கம் சமூகத்திலும் அதிகரித்து வருகிறது. ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டைக்கு முன் ‘அக்ஷத் விதரண-த்தின் போது நாடு முழுவதும் மக்கள் எங்களை வரவேற்ற விதம் காட்டுகிறது.
ராமர் கோவில் இந்தியாவின் நாகரிகம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் சின்னம். ஸ்ரீ ராமர் நாட்டின் நாகரீக அடையாளம், இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு, ஜனவரி 22 அன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 20 கோடி வீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் சென்றடைந்துள்ளது. இது வெறும் 15 நாட்களில் நடந்திருப்பது இந்திய வரலாற்றில் ஒரு சாதனையாகும் எனத் தெரிவித்தார்.