ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” விண்கலம் எடுத்த பூமியின் புகைப்படங்களை ஸ்பேஸ்எக்ஸ் பகிர்ந்துள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்து வந்தது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து நேற்று இந்த விண்கலம் கடந்த 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக இந்த ராக்கெட் இரண்டு முறை விண்ணில் செலுத்த ஸ்பேஸ்எக்ஸ் முயற்சித்துள்ளது. ஆனால் அந்த இரண்டு முறையும் அந்த ராக்கெட் வெடித்துள்ளது. இந்நிலையில் தான் மூன்றாவது முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்ணில் பாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” விண்கலம் பூமியை விட்டு வெளியே சென்றதும் போயின் புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை ஸ்பைஸ் எக்ஸ் நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.