தமிழகமோ, தெலங்கானாவோ, கர்நாடகாவோ தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான சூழல் உள்ளது எனப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நாளை சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார்.
இதற்காக, இன்று மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வாகன பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணிக்கு அதனை நிறைவு செய்கிறார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நான் இன்று ஜக்தியால் மற்றும் ஷிவமொக்காவில் நடைபெறும் பேரணிகளில் பேசுகிறேன்.
I will be addressing rallies in Jagtial and Shivamogga today. Later in the evening, will join the roadshow in Coimbatore. Be it Telangana, Karnataka or Tamil Nadu, there is exceptional fervour in the NDA’s favour.
— Narendra Modi (@narendramodi) March 18, 2024
பின்னர் மாலையில் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறேன்.
அது தமிழகமோ, தெலங்கானாவோ, கர்நாடகாவோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே சாதகமான சூழல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.