ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவ் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் விளையாடினர்.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் அபாரமாக விளையாடி வந்தார். இந்த போட்டியின் முதல் சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் 7 புள்ளிகளை பெற்று 7-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் 6 புள்ளிகளை பெற்று 6-1 என்ற கணக்கில் ரஷ்யாவின் முன்னணி வீரரான டேனியல் மெத்வதேவை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ் 2-0 என்ற கணக்கில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.