ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 88 சதவீத வாக்குகளை பெற்று, விளாடிமிர் புதின் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம், 5-வது முறையாக மீண்டும் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவில், கடந்த 15-ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இத்தேர்தலில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். கடந்த 17-ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபராக இருக்கும், விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவர், சுமார் 88 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றியைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், 5-வது முறையாக ரஷ்யாவின் அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இவர் அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் அதிபராக நீடிப்பார். மேலும், ரஷ்யாவின் வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார்.