பாஜக சார்பில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (மார்ச் 19-ம் தேதி ) சேலம் வருகிறார்.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 12:50 மணிக்கு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார்.
பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 1:50 மணி வரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
பிற்பகல் 1:55 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் விமான நிலையம் செல்கிறார். பின்னர், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் சேலம் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பகுதியும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையால் இன்று, நாளையும் சேலம் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகைக்காக, ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.