கோவை பாஜகவின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி கோவை வருகை தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதுதான் பிரதமர் மோடியின் லட்சியம். அடுத்த 25 வருடத்தில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வீறுநடை போடுகிறது. இதற்காக, பல்வேறு தொலைநோக்குப் பார்வையுள்ள திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஊழல் கட்சிகள். நாட்டின் வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கும் கட்சிகள் ஆகும். 2ஜி வழக்கில் மாபெறும் ஊழல் செய்துள்ளார் ஆ.ராசா. எனவே, ஊழல் குறித்து திமுக பேச தகுதி இல்லை.
கோவை மற்றும் நீலகிரியில் ஏராளமான திட்டங்களைச் செய்துள்ளோம். கோவையில் பாஜக போட்டியிடுவது உறுதி. காரணம், கோவை பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது என்றார்.