தமிழகத்தில் குக்கிராமம் முதல் நகரங்கள் வரை ஏராளமான தனியார் பால் நிறுவனங்கள் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவது ஆவின் பால்தான்.
ஆவின் பால் பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கிறது. பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்துக்கும் இடையே விலை வித்தியாசமும் உள்ளது.
இந்த நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தேனீர் கடையில் இன்று காலை கடையின் உரிமையாளர் ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிப் பாலை சூடு செய்வதற்காக, அடுப்பு மேல் உள்ள பாத்திரத்தில் கொட்டியுள்ளார். அப்போது, பாலில் வெள்ளை புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து, பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தார். மறக்காமல், அந்த பால் பாக்கெட்டை சோதனை செய்தார். அப்போது, அது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், உதகை நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளை ஆய்வு செய்வோம். இது தொடர்பான அறிக்கை உயர் அதிகாரிகளிடம் விரைவில் வழங்கப்படும் என்றார்.
பொது மக்களின் மிகவும் நம்பகமான ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி கடும் அடைந்துள்ளனர்.