கோவை சாய்பாபா காலனியில் இருந்து பிரதமர் மோடி ரோடு ஷோவை தொடங்கினார்.
கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
தற்போது பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறார். கோவையில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் முதன் முறையாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடிக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தற்போது பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் நோக்கி வருகிறார்.
பேரணி இறுதியில் 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். இந்நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பிரதமருடன் பயணிக்கின்றனர்.