ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடவுள்ள இந்திய ஹாக்கி அணியின் அறிவிப்பு வந்துள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடவுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஏப்ரல் 6 ஆம் தேதியும், இரண்டாம் போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
அதேபோல் மூன்றாவது போட்டி ஏப்ரல் 10 ஆம் தேதியும், நான்காவது போட்டி ஏப்ரல் 12 ஆம் தேதியும், கடைசி போட்டி ஏப்ரல் 13 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு சோதனை போட்டியாக அமையும் வகையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது 27 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இந்திய ஹாக்கி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கேப்டனாக ஹர்மான் ப்ரீத் சிங் செயல்படவுள்ளார். அதேபோல் ஹர்திக் சிங் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்திய ஹாக்கி அணி :
கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர், ஸ்ரீஜேஷ், சூரஜ் கர்கேரா.
பின்கள வீரர்கள்: ஹர்மன்பிரீத் சிங், ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், அமீர் அலி.
நடுகள வீரர்கள்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஷேர் சிங், நீலகண்ட சர்மா, ராஜ்குமார் பால், விஷ்ணுகாந்த் சிங்.
முன்கள வீரர்கள்: ஆகாஷ்தீப் சிங் , மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், தில்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், முகமது ரஹீல், போபி சிங், அரைஜீத் சிங் ஹூன்டால்.