அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன் : காரணம் என்ன?
Sep 22, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த சிறுவன் : காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் 8 வயது சிறுவன் ஒருவன் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்து.

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தில், மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் என்று பள்ளி ஒன்று உள்ளது.

இந்த பள்ளியில் கடந்த மார்ச் 14ஆம் தேதி இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 8 வயது சிறுவன் ஒருவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற அடுத்த நாள் காலையில் அந்த சிறுவன் பேச்சு மூச்சற்று வீட்டில் இருந்துள்ளான்.

அதேபோல் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகளை கண்ட பெற்றோர் உடனே அந்த சிறுவனை Benadryl என்ற மருந்தை கொடுத்து குளிப்பாட்டியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த அரிப்பு மோசமானதை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் அருகில் இருந்த மருத்துமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் சிகிச்சை முடிந்து சிறுவன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.

அடுத்த நாள் காலையில் பள்ளி செல்லுவதற்காக சிறுவனை பெற்றோர் எழுப்பியபோது அவன் எவ்வித பதிலும் சொல்லாமல் பேச்சுமூச்சற்று இருந்துள்ளான்.

இதை தொடர்ந்து அவன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் போலீஸ் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனின் மரணத்திற்கு பின் உடற்கூராய்வில் அந்த சிறுவன் அலர்ஜியால் உயிரிழந்தான் என தெரியவந்தது.

இதுகுறித்து அவனது உடலை ஆராய்ந்த மருத்துவர், அந்த சிறுவனுக்கு ஸ்ட்ராபெர்ரி அலர்ஜி என இந்த சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது என்று சந்தேகமாக கூறினார்.

மேலும் அந்த சிறுவனுக்கு ஸ்ட்ராபெரி அலர்ஜி இருக்கிறதா இல்லையா என்பது கண்டறியப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் மரணத்திற்கு பிறகு, ஹாப்கின்ஸ் நிதி திரட்டல் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரியை யாரும் சாப்பிட வேண்டாம் என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும், மருத்துவத்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,”தற்போது பொது மருத்துவத்துறை கென்டக்கியின் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை பரிசோதித்து வருகின்றன. இது தற்செயலான சம்பவம் என்றாலும் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக யாரும் தற்போதைக்கு ஸ்ட்ராபெர்ரிகளை உண்ண வேண்டாம்” என தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறிப்படுகிறது.

Tags: The boy who died after eating strawberries in America: What is the reason?
Share
Tweet
SendShare
Previous Post

கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : இந்திய அணி அறிவிப்பு!

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies