கோவையில் நடைபெற்ற பாரத பிரதமரின் வாகன பேரணி முடிந்த பின்னர் அங்கிருந்த குப்பைகளை தமிழக பாஜக-வினர்.
18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதன் முறையாக நேற்று தமிழகம் வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் நடைபெற்ற, பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடியுடன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இருந்தனர்.
சுமார் 2.5 கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்தித்தார்.
இந்த பேரணி இறுதியில் 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
We sincerely thank our @BJP4TamilNadu family who stayed back after the roadshow of our beloved PM Thiru @narendramodi avl in Coimbatore today to ensure that the streets are litter-free.
‘Be the change you want to see’, which our Hon PM would have wished of our Karyakarthas &… pic.twitter.com/rv8bfYn7xY
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 18, 2024
இந்நிலையில் பேரணி முடிந்த உடனே அந்த சாலையில் இருந்த குப்பைகளை தமிழக பாஜகவினர் பாரத பிரதமரின் ஸ்வச் பாரத் அதாவது தூய்மை இந்தியாவை மையமாக வைத்து சாலைகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
தூய்மை இந்தியாவை உருவாக்க சாலைகளை சுத்தம் செய்தவர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” கோவையில் நடைபெற்ற பாரத பிரதமரின் வாகன பேரணி முடிந்த பின்னர் அங்கே இருந்து சாலைகளை சுத்தம் செய்த தமிழக பாஜக குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி.
பாரத பிரதமர் விரும்பும் மாற்றமாக காரியகர்த்தாக்கள் செயல்பட வேண்டும் என்பதே நமது பாரத பிரதமரின் விருப்பம். தமிழக பாஜக குடும்பத்தினர் ஸ்வச் பாரதத்துக்கான தங்கள் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் ” என்று பதிவிட்டுள்ளார்.