சூரியகுமார் யாதவ், தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய இதயம் நொறுங்கியது போன்ற ஒரு எமோஜியை பதிவிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பலம் வாய்ந்த சர்வதேச அளவில் நம்பர் 1 டி20 வீரரான சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதிலிருந்து விலகிய சூரியகுமார் யாதவ் இதற்காக ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூரியகுமார் பயிற்சி செய்து வருகிறார். உடல் தகுதியை மீட்கும் பணியில் அவர் இரவு பகலாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சூரியகுமார் யாதவை சோதித்த மருத்துவர்கள், இன்னும் அவர் 100 சதவீதம் உடல் தகுதியை எட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் டி20 உலக கோப்பை ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தொடங்க உள்ளதால் அவரை அவசரப்பட்டு தற்போது களமிறக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் சூரியகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சூரியகுமார் யாதவ், தன்னுடைய இதயம் நொறுங்கியது போன்ற ஒரு எமோஜியை பதிவிட்டு இருக்கிறார்.
இதை பார்க்கும்போது சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகிறது. ஐபிஎல் தொடரை விட டி20 உலக கோப்பை மிகவும் முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை என்றால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். இதனால் மும்ப்பை ரசிகர்களு சோகத்தில் உள்ளனர்.