பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!
Aug 18, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பேச்சு!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிரைப்புரையாற்றினார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், த.மா.கா., தலைவர் வாசன், பாம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, அமமுக., பொதுச்செயலாளர் தினகரன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதிக்கட்சியின் ஏசி சண்முகம், ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி,

தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. இந்தியாவின் பிரதமராக மோடி 3வது முறையாக வர வேண்டும். பா.ஜ., கூட்டணியில் மகிழ்வோடு பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. டெல்லியில் தரகர்களை ஒழித்தவர் பிரதமர் மோடி.  ஊழலை ஒழித்தவர் பிரதமர் மோடி. மோடி வந்த பிறகு உலக அளவில் விளையாட்டு வீரர்கள் தங்க பதக்கங்களை வென்றனர் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  நடிகர் சரத்குமார்,

பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி குறித்து குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஊழலற்ற ஆட்சியாக பா.ஜ., ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. மக்கள் மத்தியில் விஷ விதைகளை விதைப்பவர்கள் தமிழகத்தின் ஆட்சியில் இருக்கிறார்கள். ராகுல் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். வருங்காலத்தில் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய மோடியின் ஆட்சி தேவை எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய  டிடிவி தினகரன்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் அனைவரும்  ஒற்றுமையாக உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்,

10 ஆண்டுகாலமாக நல்லாட்சியை பிரதமர் மோடி தந்து கொண்டிருக்கிறார். ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை இதற்கு முன்பு எந்த பிரதமரும் தரவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த நிதி தாராளமாக போதுமானது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,

இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்கியே தீருவேன் என்று முழு வாழ்வையும் பிரதமர் மோடி அர்ப்பணித்து கொண்டு இருக்கிறார். சமூக நீதியின் இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர் எனத் தெரிவித்தார்.

Tags: selambjp meetingselam visit pm modi
Share
Tweet
SendShare
Previous Post

நைஜீரியாவில் பொதுமக்கள் 100 பேரை கடத்திய ஆயுதக்குழு!

Next Post

இதயம் நொறுங்கிய சூரிய குமார் யாதவ்!

Related News

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies