மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!
Oct 2, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேகமலை பகுதியில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மேகமலை பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூரத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், மேகமலை பகுதியில் உள்ள கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியை அரசிபட்டி தொகுதியாக மாற்றியது அதிமுக அரசு எனவும் தெரிவித்தார். சாலை மற்றும் மின் இணைப்பு வசதிகளுக்கு வனத்துறை தடையாக உள்ளது என்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், கொள்கை முடிவு எடுத்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதே கருத்தை திமுக எம்எல்ஏ மகாராஜனும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது என்றும், அப்போது முறையாக கையாண்டிருந்தால் இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது எனவும் கூறினார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் வனப்பகுதி புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டது என்றும், இது தொடர்பாக வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார். 2017ல் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைத்து வருகிறது எனக்கூறிய அமைச்சர் நிர்மல்குமார், மேகமலை விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

Tags: AIADMK MLA Agri Krishnamurthytamil nadu governmenttamil nadu assembelyLaw Minister Nirmal KumarMeghamalai area.
Share
Tweet
SendShare
Previous Post

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Next Post

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

அஹிம்சை என்றால் என்ன என்பதை உலகத்திற்கு காட்டியுள்ளீர்கள் – விமானி ஸ்மித் மச்சாருடன் video call மூலம் பேசிய பிரதமர் மோடி புகழாரம்!

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies